முன்னோர்கள் கடைபிடித்து வந்த கண்திருஷ்டி பரிகாரம்

கண்ணடி பட்டால் (திருஷ்டி) நேரும் துன்பம் அத்தனை சுலபமாக நம்மை விட்டு அகலாது என்பதால் திருஷ்டி சுற்றிப் போடும் பழக்கத்தினை நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்தார்கள்.

கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது’ என்று பெரியவர்கள் சொல்வார்கள். கல்லடி படுவதால் உண்டாகும் காயம் இரண்டொரு நாளில் ஆறிவிடும். அதே நேரத்தில் கண்ணடி பட்டால் (திருஷ்டி) நேரும் துன்பம் அத்தனை சுலபமாக நம்மை விட்டு அகலாது என்பதால் திருஷ்டி சுற்றிப் போடும் பழக்கத்தினை நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்தார்கள்.

“இவன் இத்தனை சுகமாய் வாழ்கிறானே..” என்று அருகில் உள்ளோரின் உள்ளத்தில் தோன்றும் பொறாமை உணர்வினையே திருஷ்டி என்று அழைக்கிறோம். இந்த பொறாமை என்பது பொதுவாக மனிதனின் இயற்கை குணங்களில் ஒன்று. சாதாரண மனிதர்கள் ஆகிய நம் எல்லோருக்குள்ளும் இந்த எண்ணம் தோன்றுவது இயற்கை. பெண்களுக்கு இடையே அழகு, செல்வம் ஆகியவற்றிலும், ஆண்களுக்கு பதவி, பட்டம், புகழ், வசதிவாய்ப்பு ஆகியவற்றிலும், மாணவர்களுக்கு இடையே பரிசுகள் பெறுவதிலும் இம்மாதிரியான குணங்கள் தோன்றுவதைத் தவிர்க்க இயலாது.

இந்த திருஷ்டி தோஷத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பூசணிக்காய் சுற்றி உடைத்தல், எலுமிச்சம்பழம் நறுக்கி பிழிதல், சிதறு தேங்காய் உடைத்தல், ஆரத்தி சுற்றுதல், உப்புச்சுற்றிப் போடுதல், மிளகாய் சுற்றி போடுதல் என்று பல்வேறு சம்பிரதாயங்களைக் கடைபிடிக்கிறார்கள். இதனை மூட நம்பிக்கை என்று சொல்லி முற்றிலுமாக ஒதுக்கிவிட முடியாது. பிரதி சனிக்கிழமை தோறும் ஸ்ரீ சுதர்ஸனரை (சக்கரத்தாழ்வார்) வழிபட்டு வருவதால் திருஷ்டி தோஷத்திலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள இயலும்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *