முன்னாள் முதல்வரை கொல்ல முயற்சி: பெரும் பரபரப்பு

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை கொலை செய்ய பயங்கரவாதிகள் சதி செய்த அதிர்ச்சி சம்பவம் நாடு முழுவதையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு – காஷ்மீரில், கவர்னர் ஆட்சி நடந்து வரும் நிலையில் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர்களான, தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்த பரூக் அப்துல்லா, அவரது மகன், ஒமர் அப்துல்லா ஆகியோருக்கு, ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை, பரூக் வீடு அருகே, ஒரு கார் வேகமாக வந்தது; அவரது வீட்டின் வாசலில் இருந்த இரும்பு கதவு மீது மோதி தகர்த்து, வீட்டை நோக்கி கார் வேகமாக சென்றது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு வீரர்கள், காரை தடுத்து நிறுத்தினர். காரில் இருந்து இறங்கியவன், பரூக்கின் வீட்டை நோக்கி ஓடினான்; தடுக்க வந்த பாதுகாப்பு வீரர்களுடன், கைகலப்பில் ஈடுபட்டான். மேலும் வீட்டிற்குள் நுழைந்து அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தியபோது வேறு வழியின்றி பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை சுட்டு கொன்றனர்.

இதுகுறித்த விசாரணையில், அவன், பூஞ்ச் மாவட்டம், மெந்தார் பகுதியைச் சேர்ந்த, மூரத் அலி ஷா என்பது தெரிந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *