முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்

மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார் அவருக்கு வயது 66.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜெட்லி கடந்த 9ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல்நிலை கடந்த சில நாட்களாக மோசமாக இருந்ததாக தகவல்கள் வெளிவந்தது. இதனையடுத்து அவருக்கு உயிர்க்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.

இந்நிலையில் மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி அருண் ஜெட்லி இன்று மதியம் 12.07 மணிக்கு காலமானதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *