முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் பறக்கும் படையினர் சோதனை
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் திடீர் திடீரென வருமான வரித்துறையினர்களும், பறக்கும் படையினர்களும் பிரபல அரசியல்வாதிகளின் வீடுகளில் சோதனை செய்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இன்று முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்
கடலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் வீட்டில் வருமான வரித்துறை, தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை செய்து வருவதாகவும், இந்த சோதனையில் சிக்கிய ஆவணங்கள் குறித்து விரைவில் தகவல்கள் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக அவைத்தலைவர் ஐயப்பன் நாளை மறுநாள் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைய இருந்த நிலையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது
Leave a Reply