shadow

முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ கட்சியில் இருந்து நீக்கம்: ஓபிஎஸ் அதிரடி

சிங்காநல்லூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏவும், தற்போது டிடிவி தினகரன் கட்சியின் ஆதரவாளருமான சின்னச்சாமி நேற்று ரூ.8 கோடி முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் அறிவித்துள்ளனர்

இதுகுறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கட்சியின் கொள்கை – குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கோவை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.சின்னசாமி (அண்ணா தொழிற்சங்கப் பேரவை முன்னாள் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், சிங்காநல்லூர் தொகுதி) இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

கட்சித் தொண்டர்கள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply