முதல் டெஸ்ட் போட்டி: இந்திய அணி 250/9

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங்கை இந்திய அணி தேர்வு செய்த நிலையில் இன்றைய முதல் நாள ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 250 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பாக விளையாடி சதமடித்த புஜாரா 123 ரன்களில் ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

மேலும் ரோகித் ஷர்மா 37, ரிஷப் பந்த், அஸ்வின் தலா 25, கேப்டன் விராட்கோலி 3 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார்க், ஹசில்வுட், கம்மின்ஸ், லியான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *