முதல் கிறிஸ்துமஸை கொண்டாடிய கண்ணில்லாத 8 மாத குழந்தை

ரஷ்யாவில் பிறக்கும்போதே கண்ணில்லாமல் பிறந்த 8 மாத குழந்தை முதல் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது

ரஷ்யாவை சேர்ந்த சாஷா என்ற குழந்தை சமீபத்தில் கண்களே இல்லாமல் பிறந்தது. இந்த குழந்தையின் பெற்றோரிடம் இருந்து ரஷ்யாவை சேர்ந்த ஒருவர் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்த குழந்தை நேற்று தனது முதல் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியதாகவும், கண்கள் தான் இல்லையே தவிர இந்த குழந்தை முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

குழந்தையுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடியதை அவர் தனது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகியதோடு இந்த குழந்தைக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

Leave a Reply