shadow

முதல்வர் பெயரில் தேங்காய்: ஒரு வியாபாரியின் வினோத முயற்சி

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் என்ற நகரில் பொதுமக்களை கவரும் வகையில் தேங்காய் வியாபாரி ஒருவர் நூத முயற்சியில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
தேங்காய் கடை நடத்தி வரும் இவர், தனது கடையில் உள்ள தேங்காய்களை அரசியல் கட்சி தலைவர்களின் பெயரில் மூன்று வகையாக விலை நிர்ணயம் செய்து பிரித்துள்ளார்.

இதன்படி ராஜஸ்தானின் முதலமைச்சர் வசுந்தராவின் பெயரிடப்பட்டுள்ள தேங்காய் 30 ரூபாய்க்கும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் அஜ்மீரின் சட்டமன்ற உறுப்பினர் சச்சின் பைலட் ஆகியோரின் பெயரில் தலா 25 ரூபாய் மற்றும் 20 ரூபாய்க்கு தேங்காய்களை வரிசைப்படுத்தி விற்பனை செய்கிறார்.

Leave a Reply