முதல்வர் டெல்லி செல்வது எதற்காக தினகரன் கேள்வி

கஜா புயலின் பாதிப்பிற்காக இன்று மாலை டெல்லி செல்லும் முதல்வர் பிரதமர் மோடியை நேரில் சந்திக்கவுள்ள செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் முதல்வர் டெல்லிக்கு செல்வது கஜா புயலுக்கா? அல்லது தனிப்பட்ட முறையில் ஆதாயம் தேடவா? என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமரை சந்திக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவசர அவசரமாக டெல்லி செல்வது உண்மையிலேயே நிவாரண நிதி கோருவதற்கா? அல்லது தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்

மேலும் கஜா புயலால் சேதமடைந்த நூற்றுக்கணக்கான கிராமங்களை, அதிகாரிகள் பார்வையிட்டு இழப்புகளை மதிப்பீடு செய்யாத நிலையில், எதன் அடிப்படையில் முதலமைச்சர் நிவாரணம் கோர இருக்கிறார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மிகப்பெரிய இயற்கை பேரிடர் நிகழ்ந்துள்ள நிலையில், மத்திய அரசிடம் இருந்து இடைக்கால நிவாரணம் கோராதது ஏன் என்றும் தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *