முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை திடீரென சந்தித்த தமிழிசை

சென்னையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சந்திப்பு இன்று நடைபெற்றது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவின் நிலை பற்றி அறிய முதல்வரை தமிழிசை சந்தித்ததாகவும், தேமுதிகவிற்காக தமிழிசை தூது செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

மேலும் இந்த சந்திப்பில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்தும் ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுகிறது

நேற்று அமித்ஷா தமிழகம் வந்திருந்தபோது அமித் ஷாவை துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் 2 முறை சந்தித்த நிலையில் இன்று முதல்வருடன் தமிழிசை அவசர சந்திப்பு சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *