முதல்முறையாக வெளியான ‘பிகில்’ நயன்தாரா போஸ்டர்!

தளபதி விஜய் நடித்து வரும் ‘பிகில்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது முதல் இன்றுவரை விஜய்யை மையப்படுத்திய இந்த படம் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வருவதால் இரண்டு வேடங்களில் கெட்டப்புகள் மாறிமாறி புரமோஷனுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிக நடிகைகளை மருந்துக்கு கூட இதுவரை புரமோஷனில் பயன்படுத்தவில்லை என்ற ஆதங்கமும் மற்ற நடிகர், நடிகையர் இடையே உள்ளது. இந்நிலையில் முதன்முறையாக அட்லி தனது டுவிட்டரில் விஜய் உடன் நயன்தாரா இருக்கும் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ‘என்னுடைய டார்லிங் நயன்தாரா நடித்த ”உனக்காக” என்ற பாடல் இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவித்தார்

அட்லியின் இந்த டுவீட் நயன்தாரா ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்று மாலை வெளியாகவுள்ள ‘உனக்காக பாடலையும் விஜய் மற்றும் நயன்தாரா ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *