முதல்முறையாக கலப்பு குழு ஓட்டம்: இந்தியாவுக்கு வெள்ளி

இதுவரை 4×400 மீட்டர் குழு ஓட்டப்போட்டி அண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் தான் நடந்துள்ளது. ஆனால் தற்போது இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் முதல்முறையாக கலப்பு குழு ஓட்டப்போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணியில் முகமது அனாஸ், பூவம்மா, ஹீமா தாஸ் மற்றும் ஆரோக்கிய ராஜிவ் ஆகியோர் பங்கேற்றனர். இந்த போட்டியில் இந்தியா 3:15.71 நிமிடங்களில் ஓடி இரண்டாம் இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளது. இதன் மூலம் இந்தியா 9 தங்கம், 19 வெள்ளி, 22 வெண்கலம் என 50 பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.

asian games 2018 silver for india in mixed 4x400m relay

: ஹீமா தாஸ் | முகமது அனாஸ் | MR Poovamma | mohammed anas | Mixed 4x400m relay | hima das | asian games 2018 | Asian Games | Arokia Rajiv

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *