முதலில் ஆட்சியை ஒழுங்காக நடத்துங்கள், அப்புறம் கருணாநிதி குறித்து பேசலாம்: கனிமொழி

திமுக தலைவராக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேல் இருந்த ஒரு முதுபெரும் அரசியல்வாதியான கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் கொடுத்தது அதிமுக அரசு போட்ட பிச்சை என அமைச்சர் கடம்பூர் ராஜூ சமீபத்தில் பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. அமைச்சரின் இந்த கருத்துக்கு ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது திமுக எம்பி கனிமொழி தன் பங்கிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, ‘இது கீழ்த்தரமான அரசியல் என்றும், இதுகுறித்து பேசி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்றும், முதலில் ஆட்சியை ஒழுங்காக நடத்தி தகுதியை வளர்த்துக்கொண்ட பின், கருணாநிதி பற்றி பேசுவது நல்லது என்று தெரிவித்தார்.

முன்னதாக கருணாநிதி நினைவிடம் குறித்து தான் பேசியது ஏன் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ ஒரு விளக்கத்தை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *