முதலிரவை வீடியோ எடுத்த மணமகன்: அடுத்த நாளே விவாகரத்து செய்த மணமகள்

வடகிழக்கு மாநிலம் ஒன்றில் 25 வயது இளைஞன் ஒருவனுக்கும் 19 வயது இளம்பெண் ஒருவருக்கும் சமீபத்தில் திருமணம் முடிந்தது. பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட இந்த திருமணத்திற்கு பின்னர் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது

இந்த நிலையில் முதலிரவு அறைக்கு முதலில் சென்ற மணமகன் ரகசிய இடத்தில் கேமராவை மறைத்து வைத்துள்ளார். அதன் பின்னர் முதலிரவு நல்லபடியாக முடிந்து உள்ளது

காலையில் எழுந்தவுடன் ஒளித்து வைத்திருந்த கேமராவை எடுத்து அதில் உள்ள வீடியோவை எடுத்து மணமகன் ரகசியமாக பார்த்துள்ளார் அந்த நேரத்தில் திடீரென கண்விழித்த மணமகள் அந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்

மனைவியுடன் உறவு கொள்வதையே வீடியோ எடுத்த கயவன் எப்படி தனக்கு கணவராக முடியும் என்பதை முடிவு செய்து, அடுத்த நாளே அவர் கணவரை விவாகரத்து செய்ய நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்தார். மேலும் இதுகுறித்து போலீசில் புகார் செய்ததால் முதலிரவு முடிந்த அடுத்த நாளே மணமகன் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *