முதலமைச்சர் மகளா வரலட்சுமி? வெளியான ‘சர்கார்’ ரகசியம்

இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தில் விஜய் தொழிலதிபராகவும், ராதாரவி அரசியல்வாதியாகவும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் பழ.கருப்பையா முதலமைச்சராக நடித்து வருவதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் சமீபத்தில் இணைந்த நடிகை வரலட்சுமி முதலமைச்சராக நடித்து வரும் பழ.கருப்பையாவின் மகளாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவலை படக்குழுவினர் உறுதி செய்யவில்லை.

மேலும் வரலட்சுமி இந்த படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வருகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *