முட்டாள்தனமான முடிவை பாகிஸ்தான் எடுக்காது: மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

முட்டாள்தனமான முடிவை பாகிஸ்தான் எடுக்காது: மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி; இதில் எந்த முடிவையும் இந்தியா தான் எடுக்கும் என்றும், உலக நாடுகள் இந்தியாவுக்கு உறுதுணையாக இருக்கிறது என்றும், இந்தியாவிடம் ஏற்கனவே பலமுறை பாடம் கற்றுள்ளதால் முட்டாள்தனமான முடிவை பாகிஸ்தான் எடுக்காது என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்

காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச பிரச்சனையாக்க முயன்று வரும் பாகிஸ்தானுக்கு தோல்வி மேல் தோல்வி கிடைத்து வரும் நிலையில் அடுத்தகட்டமாக எல்லை தாண்டிய தாக்குதலுக்கு பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு மேற்கண்டவாறு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.