முக ஸ்டாலின் மிசா கைதியே இல்லையா? திடுக்கிடும் தகவல்

முக ஸ்டாலின் என்றாலே அனைவரும் கூறி வரும் ஒரு விஷயம் அவர் மிசா காலத்தில் சிறை சென்றவர் என்றும், சிறையில் பல கொடுமைகளை அனுபவித்தவர் என்றும் கூறுவதுண்டு. இதனை திமுகவை பிடிக்காதவர்கள் கூட ஏற்றுக்கொள்வார்கள்.

ஆனால் மிசா குறித்தும், மிசா கைதிகள் குறித்தும், இந்தியா முழுவதும் மிசாவால் பாதிக்கப்பட்டவர் குறித்தும் ஷா கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் மிசாவினால் கைதானவர்கள் பட்டியலில் முக ஸ்டாலின் பெயர் இல்லை என்பதை ஒரு தனியார் தொலைக்காட்சி ஆதாரத்துடன் கூறியுள்ளது. முக ஸ்டாலின் அவர்கள் மிசா காலத்தில் கைது செய்யப்பட்டவரே தவிர மிசா கைதி அல்ல என்றும் அந்த தொலைக்காட்சி குறிப்பிட்டுள்ளது. இதனை ஒரு கேள்வியாகவும் முன்னாள் அமைச்சர் பொன்முடியிடம் வைத்தபோது, ‘இதுகுறித்து நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply