shadow

முக ஸ்டாலின் – கே.எஸ் அழகிரி இன்று சந்திப்பு: விரிசல் ஒட்டப்படுமா?

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையால், திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவடையும் நிலைக்கு வந்தது. கூட்டணி தர்மத்தை திமுக கடைபிடிக்கவில்லை என்று கேஎஸ் அழகிரி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது தான் இதற்கு காரணம்

இந்த நிலையில் மீண்டும் திமுக-காங்கிரஸ் கூட்டணியை ஒன்று சேர்க்க இரு தரப்பிலிருந்தும் பலர் முயற்சித்து வருகின்றனர். அந்தவகையில் அடுத்தகட்ட முயற்சியாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மதியம் 12 மணிக்கு மு.க.ஸ்டாலினை கே.எஸ்.அழகிரி சந்திக்கிறார் என தகவல் வெளிவந்துள்ளது

திமுக-காங்கிரஸ் கூட்டணி இடையே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது என்றாலும் இந்த சந்திப்பால் விரிசல் மீண்டும் ஒட்டுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *