முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க வீட்டு வைத்தியம்

பெண்கள் சிலருக்கு முகத்தில் முடி இருக்கும். இவர்கள் அழகு நிலையங்களுக்கு சென்று முடியை நீக்கினால் அடிக்கடி வந்து கொண்டே இருக்கும். இந்த பிரச்சனைக்கு வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே தீர்வு காண முடியும்.

* மஞ்சளை நன்றாக அரைத்து இரவில் முகத்தில் பூசவும். காலையில் சுடுநீரில் கழுவினால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறையும்.

* பப்பாளிக் காய், மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தேய்த்தால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் நீங்கும்.

* கஸ்தூரி மஞ்சளை அரைத்து பாலாடை கலந்து பூசி வந்தால் முகத்தில் இருக்கும் முடிகள் மறையும்.

* சிறுபயறு தோலை பசும்பாலில் கலந்து, அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசினால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறையும்.

* குப்பமேனி இலையை தினமும் சாறு எடுத்து முகத்தில் தேய்த்து கழுவி வந்தால் உடனடியாக பலன் கிடைக்கும்.

* மஞ்சள் தூள், கடலைமாவு இரண்டையும் சமஅளவில் எடுத்து தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் முடி உள்ள இடங்கல் தடவி அப்படியே காயவிடுங்கள். நன்றாக காய்ந்த பின்னர் முடி முளைத்திருக்கும் திசைக்கு எதிர்திசையாக கையால் மெதுவாக சுரண்டி எடுக்க வேண்டும். பின்னர் முகத்தை நன்றாக கழுவி விடவும்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *