மீண்டும் படமாகும் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களை இயக்கிய பா.ரஞ்சித் தற்போது பாலிவுட்டில் ஒரு படம் இயக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் ஒரு வெப்சீரியல் ஒன்றை ரஞ்சித் தயாரிக்கவுள்ளதாகவும், இந்த தொடர் மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறாக உருவாக இருப்பதாகவும், திரைப்படங்களில் கூறாத சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையில் நடந்த பல மர்மங்கள் இந்த தொடரில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அவரது வாழ்க்கையில் இருந்து மரணம் வரை பரபரப்பான சம்பவங்களின் தொகுப்பாக இது உருவாக இருக்கிறது. சில்க்கின் வாழ்க்கை ஏற்கனவே ‘டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் இந்தியில் படமானது. பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோனின் வாழ்க்கை இணைய தொடராக வருகிறது. அதை போல சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறும் உருவாக உள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *