மீண்டும் ஒரு ஆர்.கே.நகர் ஃபார்முலாவுக்கு தினகரன் திட்டமா?

சமீபத்தில் இடைத்தேர்தல் நடந்த ஆர்.கே.நகரில் தனது தனி ஃபார்முலாவை பயன்படுத்தி டிடிவி தினகரன் வெற்றி பெற்றது போல் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலிலும் அதே பார்முலாவை பயன்படுத்த அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் முதன் முறையாக 2வது இடைத்தேர்தலை திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் சந்திக்கவுள்ளனர். கடந்த 2016 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எஸ்.எம்.சீனிவேலு வெற்றி பெற்றார். ஆனால் அவர் தேர்தல் முடிவு வெளியாகும் முன்னர் உடல் நலக்குறைவால் காலமானர். இதனால் புதிய அமைச்சரவை பொறுப்பேற்பது கூட தள்ளிப்போனது. இதனால் இங்கு ஒரு இடைத்தேர்தல் நடத்த வேண்டியதாயிற்று. நவ., 19ல், நடந்த இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். ஏற்கனவே இவர் போட்டியிடும் போதே அவரும் உடல் நலம் பாதிக்கப்பட்டார் என்ற பேச்சும் எழுந்தது.

இந்நிலையில் அவ்வப்போது மருத்துவமனை சென்று வந்த அவர், அதிகாலையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
2016- 2021 வரையிலான சட்டசபை காலம் முடிவதற்குள், அதாவது ஒரே காலக்கட்டத்தில் 2 எம்.எல்.ஏ.,க்கள் இறந்து விட்டதால் தற்போது 2 வது இடைத்தேர்தல் நடக்க வேண்டிய சூழலுக்கு இந்த தொகுதி தள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் இடைத்தேர்தல் கண்ட தொகுதிகள் சிற்சிலவே. அதிலும் 5 ஆண்டுக்குள் 2 இடைத்தேர்தல் காணும் ஒரே தொகுதி திருப்பரங்குன்றும் என்ற பெயர் கிட்டியிருக்கிறது. எனவே திருப்பரங்குன்றம் தொகுதியில் இன்னும் சில மாதங்களுக்கு பணமழை பொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *