மின்வெட்டை கண்டுபிடித்ததே திமுக தான்: அமைச்சர் தங்கமணி

மதுரை உள்ளிட்ட ஒருசில நகரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருப்பதாகவும், இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிப்படுவதாகவும் திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியிருந்தார்

மு.க.ஸ்டாலினின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் தங்கமணி, ‘மின்வெட்டை கண்டுபிடித்ததே திமுக ஆட்சிதான் என்றும் யாரோ எழுதி கொடுத்ததை சரிபார்க்காமல் ஸ்டாலின் அறிக்கை வெளியிடுவதாகவும் தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் 8 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மின்வெட்டு இருந்ததாகவும், தற்போது தமிழகம் மின்மிகை மாநிலமாக இருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *