மாலை நேர டிபன் தக்காளி இடியாப்பம்

தேவையான பொருட்கள்:

சேமியா/ ரெடிமேட் இடியாப்பம் – 1 பாக்கெட்
வெங்காயம் – 2
தக்காளி – 3
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
சாம்பார் பொடி/மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு…

உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு சூடானதும், அதில் ரெடிமேட் இடியாப்பத்தைப் போட்டு, 5 நிமிடம் வேக வைத்து இறக்கி, நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.

* தக்காளியானது நன்கு மென்மையாக வதங்கியதும், அதில் இடியாப்பத்தை போட்டு நன்கு பிரட்டவும்.

* கடைசியாக அதில் நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், தக்காளி இடியாப்பம் ரெடி!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *