மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு உதவிய நல்லுள்ளம் கொண்ட பெண்மணி

தாய்லாந்து நாட்டின் சிக்னல் ஒன்றில் சமீபத்தில் ஒரு மனிதாபிமான சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் அனைவரையும் நெகிழச்செய்தது

தாய்லாந்து நாட்டின் சிக்னல் ஒன்றில் ஒரு மாற்றுத்திறனாளி இளம்பெண் சாலையை கடந்து சென்றார். அவர் பாதி கடந்து செல்வதற்குள் சிக்னல் முடிந்துவிட, அவர் பதற்றமடைந்தார்.

அப்போது அங்கு வந்த நடுத்தர பெண் ஒருவர், வாகன ஓட்டிகளிடம் சில நொடிகள் பொறுமை காக்குமாறு வேண்டிக்கொண்டு, உடனே அந்த இளம்பெண்ணை தனது முதுகில் சுமந்து சாலையை கடந்தார். அதன்பின்னரே வாகனங்கள் செல்ல தொடங்கின. இந்த மனிதாபிமான சம்பவம் குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *