மாமனாரை பழிவாங்க மாமியாரை நிர்வாண படம் எடுத்த வாலிபர் கைது!

மாமனாரை பழிவாங்க மாமியாரை நிர்வாண படம் எடுத்து இணையதளத்தில் பதிவு செய்த 27 வயது வாலிபர் ஒருவரிடம் போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 27 வயது வாலிபர் ஒருவருக்கும் 23 வயது பெண் ஒருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் போது மணப்பெண்ணின் தந்தை செய்ய வேண்டிய வரதட்சனை மற்றும் நகைகளை சரிவர செய்யவில்லை போல் தெரிகிறது. இதனால் அவ்வப்போது மாமனாருக்கும் மருமகஉக்கும் சண்டை மூண்டு வந்துள்ளது

இந்த நிலையில் சமீபத்தில் தனது மகளையும் மருமகனையும் பார்க்க மாமனார் வந்திருந்தார். இதனை அடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் மருமகனை அடிக்க கையை ஓங்கியதாக தெரிகிறது

இதனால் ஆத்திரமடைந்த மருமகன், மாமனாரை பழிவாங்கும் எண்ணத்தில் அவருடைய மனைவி அதாவது தனது மாமியாரின் புகைப்படத்தை, போட்டோஷாப்பில் நிர்வாணமாக மார்பிங் செய்து இணையதளத்தில் பதிவு செய்துள்ளாராம். இந்த புகைப்படம் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாகி வந்ததை அடுத்து அதிர்ச்சி அடைந்த மாமனார், இதுகுறித்து போலீசில் புகார் செய்துள்ளார்

போலீசார் இதுகுறித்து விசாரணை செய்த போது இதனை செய்தது அவருடைய சொந்த மருமகன் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து மருமகனிடம் போலீஸார் விசாரணை செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய முற்பட்டபோது, தனது மகளின் எதிர்காலம் கருதி மருமகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று என் மாமனார் கேட்டுக் கொண்டதற்கிணங்க அந்த வாலிபரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். மீண்டும் ஒரு முறை இதேபோல் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *