shadow

மாதிரி வாக்குப்பதிவு தொடக்கம்: தயார் நிலையில் விக்கிரவாண்டி-நாங்குநேரி

தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய 2 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்குப்பதிவு நேரத்தில் ஏதும் பிரச்சனை வராமல் இருக்க சற்று முன்னர் இரு தொகுதிகளிலும் உள்ள தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவு நடத்தினர்

இந்த மாதிரி வாக்குப்பதிவில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்தவித கோளாறும் இல்லை என உறுதி செய்த பின்னர், வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கவுள்ளது. தேர்தலுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் பரவலாக மழை பெய்து கொண்டிருந்தாலும் பொதுமக்கள் வாக்களிக்க ஆர்வத்துடன் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *