மாதவன் அடுத்த படத்தில் சூர்யா-ஷாருக்கான்

‘இறுதிச்சுற்று படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎண்ட்ரி ஆன மாதவன் தற்போது ‘ராக்கெட்டரி’ என்ற படத்தை நடித்து இயக்கி வருகிறார். கேரளாவை செர்ந்த விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறு திரைப்படமான இந்த படத்தில் சிறப்பு தோற்ற கேரக்டரில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார். அதேபோல் இந்த படத்தின் இந்தி பதிப்பில் இந்த கேரக்டரில் ஷாருக்கான் நடிக்கவுள்ளார்.

ஏற்கனவே சூர்யாவும் மாதவனும் ஆயுத எழுத்து’ மற்றும் ‘மன்மதன் அன்பு’ ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாதவன், சிம்ரன், உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார். சிர்ஷா ராய் ஒளிப்பதிவில், சதீஷ் சூர்ய படத்தொகுப்பில் இந்த படம் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.

Leave a Reply