மாஃபியா ஒரு ஆடுபுலி ஆட்டம் படம்: கார்த்திக் நரேன்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஃபியா’ திரைப்படம் பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் கார்த்திக் நரேன் கூறியிருப்பதாவது:

மாஃபியா” உருவாக காரணமாயிருந்த இருவர் லைகாவும், அருண்விஜய்யும் தான். இருவருக்கும் நன்றி. கதை விவாதத்தின்போதே அருண் விஜய், பிரசன்னா தான் மனதில் இருந்தார்கள். அவர்களே இந்தப் படத்தில் நடித்தது பெரும் மகிழ்ச்சி. ’தடம்’சமயத்தில் தான் அருண்விஜய்யிடம் கதை சொன்னேன். அவருக்கு பிடித்திருந்தது. வெகு இயல்பாக இருந்தார். வெகு அற்புதமாக நடித்துள்ளார். பிரசன்னா ஒரு மிகச்சிறந்த நடிகர். அவரது நடிப்பில் இந்தப்படத்தின் வில்லன் வேடம் மிகச்சிறப்பாக பேசப்படும். ப்ரியா பவானி சங்கர் இதுவரை செய்யாத வேடம், இந்தக்கதாப்பாத்திரம் பற்றி கேட்டபோதே என்னை வித்தியாசமாக யோசித்ததற்கு நன்றி என்றார். ரசிகர்களும் அவரை ரசிப்பார்கள்.

பாடலாசிரியர் விவேக் அவர்களுக்கு நான் ரசிகன். இதில் அருமையாக எழுதியுள்ளார். ஜேக்ஸ் அண்ணா ’துருவங்கள் பதினாறு’ படத்தில் இருந்தே தெரியும். இந்த படத்தில் உலகத்தரமான இசையை தந்துள்ளார். 33 நாட்களில் இந்தப் படத்தை எடுத்துள்ளோம் படக்குழுவின் ஒத்துழைப்பு இல்லையென்றால் இது சாத்தியமே இல்லை. படக்குழு அனைவருக்கும் நன்றி. பிப்ரவரி 21 படம் வருகிறது. இது ஆடு புலி விளையாட்டு போல் இருக்கும். ரசிகர்கள் அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் என நம்புகிறேன்’என்று கூறியுள்ளார்.

இந்த படத்தை அடுத்து கார்த்திக் நரேன், தனுஷ் நடிக்கும் திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. சத்யஜ்யோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *