shadow

மலேசிய பிரதமருடன் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சந்திப்பு

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மலேசியா சென்றுள்ள நிலையில் அவர் தற்போது மலேசிய பிரதமர் நஜீப் ரஜாக் அவர்களை சந்தித்து பேசியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

இந்த சந்திப்பின்போது திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்தும், தமிழக மக்கள் பற்றியும் மலேசிய பிரதமர் கேட்டறிந்ததாக ஸ்டாலின் மலேசிய செய்தி நிறுவங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். மேலும் மலேசியாவில் விரைவில் நடைபெற உள்ள தேர்தலில் மலேசிய பிரதமர் மீண்டும் வெற்றிப் பெற மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

முன்னதாக மலேசியாவில் நேற்று நடைபெற்ற உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply