மருந்து உற்பத்தி ஆலையில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்: 3 பேர் பலி

அமெரிக்காவின் மேரிலான்ட் மாநிலத்தில் உள்ள ஹார்போர் கவுண்டி நகரில் ரைட் ஏய்ட் என்ற மருந்து உற்பத்தி ஆலை செயல்படுகிறது. உள்ளூர் நேரப்படி வியாழன் காலை அங்கு துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர், 3 பேரை சுட்டுக்கொன்றுள்ளான்.

மேலும், 5 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுமார் 1000 பணியாளர்கள் அங்கு இருந்து வரும் நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. போலீஸ் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பிடிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *