மரண மாஸ், தலைவர் குத்து: ‘பேட்ட’ பாடல் குறித்து கார்த்திக் சுப்புராஜ் டுவீட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் குத்துபாடல் என்பது அரிதாகவே இருக்கும். கடந்த சில வருடங்களாக அவர் நடித்த பாடலில் குத்துப்பாட்டு இடம்பெறவில்லை

இந்த நிலையில் ‘பேட்ட’ படத்தில் மரண மாஸ், தலைவர் குத்து பாடல் ஒன்று இருப்பதாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். அனிருத் இசையில் உருவாகியுள்ள மரணமாஸ் குத்துப்பாட்டை ரசிக்க தயாரகுங்கள் என்று கார்த்திக் சுப்புராஜ் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி ரஜினியின் ஸ்டைலான கலர்புல்லான ஒரு புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருவதுடன் மரண மாஸ் மற்றும் தலைவர் குத்து ஆகிய வாசகங்கள் டுவிட்டர் ஹேஷ்டேக்கிலும் இடம்பெற்றுள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *