shadow

மம்மூட்டியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி என்ன ?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இசைஞானி இளையராஜா இசையில் 1991 ஆம் ஆண்டு வெளியான தளபதி படத்தில் ரஜினிக்கு நண்பனாக நடித்தார் மம்மூட்டி. இப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் மிக பிரபலமானார் மம்மூட்டி.

தற்போது இயக்குனர் ராம் இயக்கத்தில் பேரன்பு என்னும் தலைப்பு கொண்ட படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பி.எல்.தேனப்பன் தயாரிப்பில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, அஞ்சலி, சாதனா, சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, லிவிங்ஸ்டன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவும், சூர்யா பிரதாபன் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

Leave a Reply