மனைவியுடன் தகராறு: தனக்குத்தானே ஆணுறுப்பை வெட்டிக்கொண்ட கணவர்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவர் ஒருவர் தனக்குத்தானே ஆணுறுப்பை வெட்டிக்கொண்டு மரணம் அடைந்த சம்பவம் சென்னை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சென்னை அயனாவரத்தில் சேர்ந்த கூலி தொழிலாளி மனோகரன். இவருக்கும் சரிதா என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன் திருமணம் நடைபெற்றது

திருமணம் நடந்த நாளில் இருந்து தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவி சரிதாவை அடித்து துன்புறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனால் சரிதா கோபித்துக்கொண்டு அருகில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார்

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் குடிபோதையில் வந்த மனோகரன், சரிதா வீட்டில் சென்று தகராறு செய்துள்ளார். இதனை பக்கத்து வீட்டிலுள்ள ராகவேந்தர் என்பவர் தட்டி கேட்டுள்ளார்

இதனால் ஆத்திரமடைந்த மனோகரன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுக்க முயன்றபோது, கத்தி தவறுதலாக அவருடைய ஆண் உறுப்பில் பட்டு ரத்தம் குபுகுபு என வந்தது

இதனை அடுத்து படுகாயமடைந்த மனோகரன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்

குடிபோதையில் தனக்குத்தானே ஆணுறுப்பை வெட்டி மனோகரன் மரணமடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *