மனதுக்கு ஓய்வு கொடுங்கள் பெண்களே!

பெண்கள் பயனற்ற விஷயங்களை பற்றி சிந்தித்து தங்களை வருத்திக்கொள்கிறார்கள். தேவையில்லாத விஷயங்களை பற்றி சிந்திப்பது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.இயந்திரத்தனமான இன்றைய வாழ்க்கை சுழற்சிக்கு ஈடு கொடுத்து இயங்கிக் கொண்டிருப்பவர்களில் பெண்களில் பெரும்பாலானோர் ஓய்வெடுக்க நேரமின்றி உழைத்து கொண்டிருக்கிறார்கள். வேலை இல்லாத போதும் அவர்களுடைய மனமும் உடலும் ஓய்வெடுக்க தயாராகுவதில்லை. எதையாவது பற்றி சிந்தனை செய்து கொண்டிருப்பார்கள். அதுவே தேவையில்லாத மனக்குழப்பத்தை தோற்றுவிக்கும்.

பெண்கள் பெரும்பாலானவர்கள் பயனற்ற விஷயங்களை பற்றி சிந்தித்து தங்களை வருத்திக்கொள்கிறார்கள். வேலை இல்லாதபோது மனதுக்கு ஓய்வு கொடுத்துவிட வேண்டும். அதை விடுத்து பெண்கள் தேவையில்லாத விஷயங்களை பற்றி சிந்திப்பது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். ஆரோக்கியமான மனநிலைக்கும் பங்கம் விளைவித்து விடும்.

பெண்களே எத்தகைய கடினமான வேலைப்பளு இருந்தாலும் தினமும் குறிப்பிட்ட நேரத்தை மனதுக்கு ஓய்வு கொடுக்க செலவிடுங்கள். அந்த சமயத்தில் எந்தவிதமான சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். மனதை அலைபாய விடாதீர்கள். வேலையின் அடுத்த கட்ட நகர்வுகளை பற்றியோ, கையில் எடுத்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவை பற்றியோ சிந்தித்துக்கொண்டிருக்காதீர்கள்.

எப்போதும் ஏதாவது ஒரு சிந்தனையில் மூழ்கி கிடப்பவர்கள் மனதை அமைதி நிலைக்கு திருப்புவது எளிதாக சாத்தியமாகும் விஷயமல்ல. தினமும் குறிப்பிட்ட நேரத்தை மன அமைதிக்கான பயிற்சிக்கு ஒதுக்குவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். அது வாடிக்கையாக தொடரும்போது தேவையற்ற எண்ணங்கள் மனதில் தோன்றுவது குறையும். நாளடைவில் சில நிமிடங்கள் மனம் அமைதி நிலைக்கு திரும்புவது பழக்கமாகிவிடும்.

இந்த அமைதி நேரம் உங்களுடைய வாழ்க்கைக்கு வசந்தம் சேர்க்கும். தேவையற்ற மனக்குழப்பங்களில் இருந்து மீண்டு வருவீர்கள். பின்பு புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்புடனும் செயல்படுவீர்கள். எதையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் மனோபாவம் தோன்றும். மன அழுத்தம் நீங்கி மனத்தெளிவு ஏற்படும். மனதை இப்படி ஒருநிலைப்படுத்துவதற்குதான் தியானம் மேற்கொள்ளப்படுகிறது. தியான பயிற்சி மேற்கொள்கிறவர்களால், அமைதியான மனநிலையுடன் வாழ முடியும்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *