மத்திய பிரதேச முதல்வர் யார்? போட்டியில் 3 பேர்!..

சமீபத்தில் நடந்து முடிந்த மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் தற்போது முழுமையாக வந்துவிட்டது.

இம்மாநிலத்தில் மட்டும் பாஜக, காங்கிரஸ் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பதில் இழுபறி ஏற்பட்டிருந்தது.

ஆனால் தற்போது அனைத்து தொகுதிகளின் முடிவுகளும் வெளிவந்துவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு 114 தொகுதிகளும், பாஜகவுக்கு 109 தொகுதிகளும் கிடைத்துள்ளதூ. ஆட்சி அமைக்க 116 தொகுதிகள் தேவை என்பதால் மற்ற கட்சிகளின் உதவியால் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என கருதப்படுகிறது.

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் போட்டியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கமல்நாத், திக்விஜய் சிங், ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் உள்ளனர்..இவர்களில் யாரை ராகுல்காந்தி தேர்வு செய்யப்போகிறார் என்பது இன்று தெரிந்துவிடும்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *