மத்திய தொழிலாளர் துறையில் வேலை வேண்டுமா?

மத்திய தொழிலாளர் துறையின் கீழ் ‘லேபர் பீரோ’ எனப்படும் தொழிலாளர் பணியக அமைப்பின், சென்னை, மும்பை, அகமதாபாத், சண்டிகார், கான்பூர், கொல்கத்தா, கவுகாத்தி ஆகிய கிளைகளில் காலியாக உள்ள சூப்பிரவைசர், இன்வெஸ்டிகேட்டர், கன்சல்டன்ட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதில் சென்னையில் மட்டும் சூப்பிரவைசர் பணிக்கு 38 இடங்களும், இன்வெஸ்டிகேட்டர் பணிக்கு 232 இடங்களும், கன்சல்டன்ட் பணிக்கு 2 இடங்களும் நிரப்பட உள்ளது. அதன் விவரம் பின்வருமாறு

மொத்தம் பணியிடங்கள்: 875

கல்வித்தகுதி மற்றும் பணி விவரங்கள்: இன்வெஸ்டிகேட்டர் பணிக்கு, பி.ஏ., பி.காம்., பி.எஸ்.சி., பி.பி.இ., புள்ளியியல், கணிதவியல், எக்கனாமிக்ஸ் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சூப்பிரவைசர் மற்றும் கன்சல்டன்ட் பணிக்கு எக்கனாமிக்ஸ், அப்ளைடு எக்கனாமிக்ஸ், பிசினஸ் எக்கனாமிக்ஸ், எக்கனாமெட்ரிக்ஸ், ஸ்டாட்டிஸ்டிக்ஸ், மேத்தமேடிக்ஸ், காமர்ஸ் போன்ற பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : இன்வெஸ்டிகேட்டர் பணிக்கு 21 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களும், சூப்பிரவைசர் மற்றும் கன்சல்டன்ட் பணிக்கு 21 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

மாத சம்பளம்:

கன்சல்டன்ட் பணி – ரூ.60,000

சூப்பிரவைசர் பணி- ரூ.21,120

இன்வெஸ்டிகேட்டர் பணி – ரூ.19,800

விண்ணப்பிக்க இறுதி நாள்: 5-7-2018

விண்ணப்பிக்கும் முறை: http://www.lbchd.in/ApplicationForm.aspx என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ள http://www.lbchd.in/ApplicationForm.aspx என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *