மதுரை ரயில்வே தேர்வில் தேர்வானவர்களில் 90% பேர் வெளிமாநிலத்தவர்கள்: கொந்தளிக்கும் தமிழர்கள்

மதுரை கோட்டத்தில் நடந்த ரயில்வே தேர்வில் தேர்வானவர்களில் 90% பேர் வெளிமாநிலத்தவர்கள் என்பதால் தமிழர்கள் கொதித்து எழுந்துள்ளனர். சமீபத்தில் மதுரை கோட்டத்தில் காலியாகவிருந்த 572 பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் தமிழகத்தை சேர்ந்த 10க்கும் குறைவானவர்களே தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 550க்கும் மேற்பட்டவர்கள் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களே என்பதுதான் அதிர்ச்சியான தகவல்

தேர்வில் அதிகளவில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்காததே காரணம் என ரயில்வே விளக்கம் அளித்திருந்தாலும் இந்த விளக்கத்தை தமிழ் அமைப்புகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த விஷயத்தை சீமான் போன்றவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க கையில் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *