மதுரை தியேட்டர்களில் சர்கார் காட்சிகள் ரத்து: விஜய் ரசிகர்களிடையே பரபரப்பு

தற்போது ஓடாத ஒருசில படங்களை அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவிப்பதாக கூறி ஓட வைப்பது வழக்கமாகிவிட்டது. மெர்சல் திரைப்படம் சுமாரான வசூலையே தந்து கொண்டிருந்த நிலையில் தமிழக பாஜகவினர் புண்ணியத்தில் அந்த படம் சூப்பர் ஹிட்டாகியது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கவேண்டும் என்று வலியுறுத்தி மதுரை சினிப்பிரியா காம்ப்ளக்ஸ் முன் இன்று மதியம் அதிமுக பிரமுகர் ராஜன் செல்லப்பா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டதால் தியேட்டர் முன் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் இந்த படத்தை காண வந்த ரசிகர்கள் திரையரங்கினுள் செல்ல முடியாமல் தவித்தனர்.

இந்த நிலையில் சினிப்பிரியா தியேட்டர் காம்ப்ளக்ஸில் உள்ள சினிபிரியா, மினிபிரியா, சுகப்பிரியா ஆகிய 3 திரையரங்குகளில் ‘சர்கார்’ படத்தின் பிற்பகல் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால் படம் பார்க்க வந்த விஜய் ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *