விமானங்கள் அதிரடி ரத்து

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதன் காரணமாக ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த நான்கு மாவட்டங்களை தவிர வேறு சில மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதை அடுத்து மேலும் ஒரு சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது

இந்த நிலையில் தமிழக அரசு நேற்று மாலை திடீரென அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதில் மதுரையில் நாளை முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும், ஆட்டோ மற்றும் பேருந்துகள் ஓடாது என்றும் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இருக்கும் நிபந்தனைகள் அனைத்தும் மதுரைக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் மதுரையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதை அடுத்து சென்னையிலிருந்து மதுரைக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மதுரை மட்டுமன்றி திருச்சி மற்றும் தூத்துக்குடி செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply