மதிப்பெண் மறுமதிப்பீடு விவகார்ம்: அண்ணா பல்கலையின் பதிவாளர் பதவிநீக்கம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறு மதிப்பீட்டில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக பதிவாளர் கணேசன் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அண்ணா பல்கலைகழகத்தில் நடைபெற்ற பருவத் தேர்வுகளில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது.

இத்தேர்வில் மறுகூட்டலில் மட்டும் சுமார் 73,000 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். கூடுதலாக மதிப்பெண் பெறுவதற்கும், மறுகூட்டலுக்கும் விண்ணப்பித்த மாணவர்களைத் தேர்ச்சி பெறச் செய்ய பாடம் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான புகாரை விசாரித்த லஞ்ச ஒழிப்புத்துறை, உமா தற்போது அண்ணா பல்கலைகழகத்தில் அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் பேராசிரியையாக பணியாற்றி வரும் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உமா உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது.

இதனையடுத்து, முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உமாவும் அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் விஜயகுமார், சிவக்குமார் ஆகியோரும் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்த முறைகேட்டுக்கு பதிவாளர் கணேசன்தான் முக்கியக் காரணம் என்று ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியது. இதன் எதிரொலியாக பதிவாளர் கணேசன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுவதாக துணை வேந்தர் சூரப்பா அறிவித்துள்ளார். அவருக்குப் பதிலாக ஜெ.குமார் என்பவர் புதிய பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *