மணல் அள்ளுவதற்கு தடை: ஆந்திர அரசு அதிரடி உத்தரவு

ஆந்திராவில் மணல் அள்ளுவதற்கு அம்மாநில அரசு தடை செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இதுகுறித்து ஆந்திர மாநில சுரங்கத்துறை அமைச்சர் பெத்தி ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:

மணல் முறைகேட்டை தடுக்கும் விதமாக, தற்போதுள்ள மணல் எடுக்கும் சட்டம் ரத்து செய்யப்படுகிறது. தற்போதுள்ள மணல் கொள்கை ரத்து செய்யப்படுகிறது. புதிய கொள்கை ஜூலை 1 ஆம் தேதி அறிவிக்கப்படும். மணலை இலவசமாக எடுத்துக் கொள்ளும் சட்டத்தை பயன்படுத்தி வெளி மாநிலங்களுக்கு முறைகேடாக மணல் கடத்தப்பட்டு வந்ததால் இந்த நடவடிகை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் பெத்தி ரெட்டி ராமச்சந்திர ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a Reply