மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வரத் தயார்: நடிகை சுஹாசினி

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் பல திரைநட்சத்திரங்கள் அரசியலில் குதித்து முதல்வர் ஆக வேண்டும் என்ற கனவு கண்டு வரும் நிலையில் நடிகைகளும் தற்போது அரசியல் களத்தில் குதிக்க தயாராகி வருகின்றனர்.

சமீபத்தில் சென்னை வேளச்சேரியில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை சுஹாசினி, ‘ஏன் அரசியலுக்கு ரஜினி, கமல் மட்டும்தான் வரவேண்டுமா? ராதிகா, ரேவதி, பூர்ணிமா, நதியா ஏன், எனக்கு வாய்ப்பு கொடுத்தால் கூட அரசியலுக்கு வர தயாராக இருக்கின்றோம். நாங்கள் அரசியலுக்கு வரலாமா? என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.

மேலும் ஜெயலலிதாவை நம்பி ஒரு பெரிய பொறுப்பை கொடுத்தது போல் ரேவதி போன்றவர்களுக்கும் பொறுப்பை கொடுக்கலாம் என்று அவர் கூறினார். மிக விரைவில் நடிகைகள் தரப்பில் இருந்து அரசியல் அறிவிப்பு வெளிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *