மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்கப்படும் என ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் சற்றுமுன் கமல்ஹாசன் தனது கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதில் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியல் 24ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அதில் நான் போட்டியிடுவேனா? என்பது குறித்தும் அறிவிக்கப்படும் என்று கூறினார். மேலும் அன்றைய தினமே சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்படவுள்ளதாக கமல் தெரிவித்தார்.

திருவள்ளூர் – லோகரங்கன்

சென்னை வடக்கு – ஏஜி மவுரியா

மத்திய சென்னை – கமீலா நாசர்

ஸ்ரீபெரும்பதூர் – சிவக்குமார்

அரக்கோணம் – ராஜேந்திரன்

வேலூர் – ஆர். சுரேஷ்

கிருஷ்ணகிரி – ஸ்ரீகாருண்யா

தருமபுரி – வழக்கறிஞர் ராஜசேகர்

விழுப்புரம் – வழக்கறிஞர் அன்பின் பொய்யாமொழி

சேலம் – மணிகண்டன்

நீலகிரி – வழக்கறிஞர் ராஜேந்திரன்

திண்டுக்கல் – டாக்டர் எஸ்.சுதாகர்

திருச்சி – வி.ஆனந்தராஜா

சிதம்பரம் – டி.ரவி

மயிலாடுதுறை – ரிபாஃயுதீன்

நாகை – கே.குருவையா

தேனி – ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி – டி.டி.எஸ் பொன்குமரன்

நெல்லை – என்.வெண்ணிமலை

குமரி – எபிநேசர்

புதுச்சேரி – எம்.ஏ.எஸ் சுப்ரமணியன்

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *