மக்கள் கூட்டம் சேராததால் ஆவேசமாக திரும்பி சென்ற கமல்!

மக்கள் கூட்டம் சேராததால் ஆவேசமாக திரும்பி சென்ற கமல்!

கடந்த ஆண்டு நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சியை ஆரம்பித்த நிலையில் அவருடைய கட்சியை மற்ற அரசியல் கட்சிகள் கண்டுகொள்ளவே இல்லை. கட்சியே ஆரம்பிக்காத ரஜினி குறித்த செய்தி தலைப்பு செய்தியாகவும், கட்சி ஆரம்பித்த கமலின் செய்தி பெட்டிச்செய்தியாகவும் வெளி வந்து கொண்டிருக்கின்றது

இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் கூட்டம் இல்லாததால் மீண்டும் வருவேன் என ஆவேசமாக கூறிவிட்டு கமல் கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு சரியான நேரத்தில் கமல் வந்தார். ஆனால் மிகக்குறைந்த அளவு கூட்டமே இருந்தது. இதனால் பேச மனமின்றி கமல் செல்ல முயன்றபோது அவரை பேசுமாறு அங்கிருந்தவர்கள் கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து என்னை உற்சாகப் படுத்திக் கொள்ளவும் உங்களை உற்சாகப்படுத்தும் வந்தேன் என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்

 

Leave a Reply