மக்களை சந்திக்க அரசியல் கட்சிகள் அச்சப்படுகின்றன: டிடிவி தினகரன்

திருவாரூர் தொகுதியின் இடைத்தேர்தல் வரும் 28ஆம் தேதி என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பாளர்களை திமுக உள்ளிட்ட ஒருசில கட்சிகள் அறிவித்திருந்தாலும் இந்த தேர்தலை நிறுத்த மறைமுகமாக வேலை செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ‘மக்களை சந்திக்க அரசியல் கட்சிகள் அச்சப்பட்டு இடைத்தேர்தல் வேண்டாம் என்பதை ஏற்க முடியாது என்றும், இடைத்தேர்தல் வேண்டாம் என மக்கள் கூறினால் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் பணத்தால் மக்களை விலைக்கு வாங்க முடியும் என்றால் ஆர்.கே.நகரில் அதிமுக தான் வென்றிருக்கும் என்றும் திருவாரூரில் வெற்றி பெற ஏற்கனவே தங்களிடம் திட்டம் இருப்பதாகவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *