shadow

மகா சிவராத்திரி விழா: ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் சிறப்பு ஏற்பாடு

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் நிர்வாக அதிகாரி அலுவலகத்தில், கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நிர்வாக அதிகாரி பிரம்மராம்பா தலைமை தாங்கி பேசினார்.

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 8-ந்தேதி வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. கடந்த ஆண்டு வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின்போது நடந்த நிறை, குறைகளை மனதில் வைத்துக் கொண்டு அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் முழு கவனத்துடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்ற வேண்டும். குறைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வருடாந்திர மகா சிவ ராத்திரி பிரம்மோற்சவ விழா இன்னும் 36 நாட்களே உள்ளன. எனவே முன்னேற் பாடு பணிகளை திட்டமிட்டு செய்ய வேண்டும். அதில் முக்கியமாக என்ஜினீயரிங் துறை அதிகாரிகள் மின்விளக்கு அலங்காரம் செய்வது, தரிசன வரிசைகளை அமைப்பது உள்ளிட்ட பணிகளை உடனே தொடங்க வேண்டும். இதுதொடர்பாக கோவில் என்ஜினீயர் வெங்கடநாராயணாவுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் ஆர்வமுடன் பங்கேற்று நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்தும் கலைஞர்கள் ஒரு விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து வருகிற 10-ந்தேதிக்குள் கோவில் அலுவலகத்துக்கு நேரில் வந்து கொடுக்கலாம். அல்லது தபால் மூலமாக அனுப்பி வைக்கலாம். வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் போது உற்சவர்கள் எழுந்தருளி வீதிஉலா செல்லும் 8 வாகனங்களுக்கு நெல்லூரைச் சேர்ந்த பிரபாகர்ரெட்டி என்ற பக்தர் தங்கத்தகடு பொருத்தி விரைவில் ஒப்படைக்க உள்ளார்.

அதேபோல், நெல்லூரைச் சேர்ந்த மற்றொரு பக்தரான ஆதிநாராயணரெட்டி என்பவர் கோவிலில் உள்ள குரு தட்சிணாமூர்த்தி சன்னதி கொடி மரத்துக்கு தங்கத்தகடு பொருத்தி கொடுக்க முன் வந்துள்ளார். அந்தப் பணிகள் விரைவில் முடிந்து விடும். சொர்ணமுகி ஆற்றங் கரை ஓரம் கடந்த ஆண்டு ஏற்பாடு செய்திருந்த துபோல் ‘‘திவ்ய கைலாச கங்கா ஸ்நான அறை’’ அருகில் நதிநீர் ஸ்நானம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்துத் தரப்படும். அதிகாரிகள் பொறுப்பாக செயல்பட்டு பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு கோவில் நிர்வாக அதிகாரி பிரம்மராம்பா பேசினார்.

கூட்டத்தில் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply