மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி! என்ன செய்ய போகிறது பாஜக?

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டு வரும் நிலையில் மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் சரத்பவார் முக்கிய ஆலோசனையில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்த ஆலோசனைக்கு பின் இன்று மதியம் 2.30 மணி அளவில் சிவசேனா கட்சியின் சார்பில் ஆளுநரை உத்தவ் தாக்கரே சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது

இதனையடுத்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனா உரிமை கோரவிருப்பதாகவும், எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் சிவசேனா மூத்த தலைவர்கள் கொடுக்கவிருப்பதாகவும், பெரும்பான்மையை நிரூபிக்க கூடுதல் கால அவகாசம் கோரவும் சிவசேனா திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் நட்சத்திர ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் சிவசேனா ஆட்சி அமைக்கும் முயற்சியை பாஜக தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், அக்கட்சி மேலிடம் இன்று சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply