shadow

மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி: சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனைகள்

ஜப்பானில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி போட்டி இன்று நடைபெற்றது இந்தியா மற்றும் சீன அணி வீராங்கனைகள் மோதிய இந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.

இன்றைய ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகளும், சீன வீராங்கனைகளும் மாறி மாறி கோல் போட்டு போட்டியை பரபரப்பாக்கினர். இருப்பினும் இறுதியில் இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

13 வருடங்களுக்கு பிறகு இந்திய மகளிர் அணி ஆசிய கோப்பையை கைப்பற்றியுள்ளது. சமீப காலங்களில் இந்திய மகளிர் அணியின் பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. இதற்கு முன் 2004 -ம் ஆண்டு இந்திய மகளின் ஹாக்கி அணி ஆசிய கோப்பையை கைப்பற்றி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply