மகனை கருணைக்கொலை செய்ய அனுமதி கேட்ட பரிதாப தம்பதி

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த திருமேணி- சசிகலா தம்பதியின் மகன் பாவேந்தனை கருணைக் கொலை செய்ய அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அப்போது, சிறுவனை சோதனை செய்ய மருத்துவர்கள குழு அடங்கிய பட்டியலை மத்திய, மாநில அரசுகள் தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில் கடலூரிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனக்கு அழைத்து வரப்பட்ட சிறுவன் பாவேந்தனுக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்யவுள்ளனர். இந்த பரிசோதனை முடிவுகள் வரும் 4ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

அதன்பின்னர்தான் கருணைக்கொலைக்கு அனுமதிக்கப்படுமா? என்பது குறித்து தெரியவரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *