போலீஸ் கேரக்டருக்காக உடம்பை குறைத்த அஜித்!

நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை அடுத்து அஜித் நடிக்கவுள்ள ‘தல 60’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தையும் இயக்குனர் எச்.வினோத் இயக்கவுள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்திற்காக அஜித் தனது உடல் எடையை ஆச்சரியப்படும் வகையில் குறைத்துள்ளார். இந்த படத்தில் அஜித் போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளதாகவும், அவரது ஸ்லிம் லுக்கிற்கு இதுவே காரணம் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் அஜித் ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கவுள்ளதாகவும், வில்லனாக அர்ஜூன் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply